Signed in as:
filler@godaddy.com
நாம் உலகைப் பார்க்கும் முறைக்கும், ஒரு ஞானம் அடைந்தவர் உலகைப் பார்க்கும் முறைக்கும் வேறுபாடு உள்ளது.
நமது கண்கள் ஒரு பொருளைப் பார்க்கும்போது, மனம் உடனடியாகத் தன் நினைவகத்தில் (Memory) இருக்கும் அனுபவங்கள், விருப்பு-வெறுப்புகள் மற்றும் முன்முடிவுகளைக் கொண்டு அதற்கு ஒரு 'லேபிள்' ஒட்டுகிறது. இதனால் நாம் பொருளை அல்லது மனிதர்களை 'அவை உள்ளபடி' (As it is) காண்பதில்லை. மாறாக, நமது மனதின் எண்ண அலைகள் வழியே உருமாறிய பிம்பத்தையே காண்கிறோம்.
கண்ணாடியைப் போன்ற மனம்
தீர்ப்புகளற்ற நிலை (ஞானியின் நிலை) கண்ணாடி தன் முன் நிற்பது அழகோ, அழுக்கோ, ஏழையோ, பணக்காரனோ... எதையும் தன் வசப்படுத்திக் கொள்வதில்லை; எதன் மீதும் தீர்ப்பு வழங்குவதில்லை.
பற்று அற்ற நிலை: அதன் முன்னால் இருந்து பொருள் நகர்ந்தவுடன், பிம்பமும் மறைந்துவிடும். கண்ணாடி எந்தப் பதிவையும் தன்மேல் வைத்துக்கொள்வதில்லை.
ஞானமடைந்த மனம் இந்தத் தூய்மையைப் பெறும்போது, உலக நிகழ்வுகளைத் தன் அகங்காரத்தின் (Ego) வடிகட்டி இல்லாமல் அப்படியே தூய சாட்சியாகத் தரிசிக்கிறது.
· மனதில் உள்ள கடந்தகால அனுபவங்கள், அபிப்பிராயங்கள் மற்றும் 'நான்-எனது' என்ற அகங்காரப் பதிவுகள் விலகும்போது, அங்கே எஞ்சுவது இந்த தூய விழிப்புணர்வு மட்டுமே. அதுவே கண்ணாடியைப் போல எதையும் மாசுபடுத்தாமல் பிரதிபலிக்கும் பிரம்ம நிலை!
“ப்ரக்ஞானம் பிரம்ம” பொருள்: தூய்மையான விழிப்புணர்வே (Consciousness) பிரம்மம்.
- மதியோகி.
முழு வானத்தையும் பார்த்தவர்கள் இந்த பூமியில் இருக்கிறார்களா ..?
தீய செயலை செய்கிறான் என்பதால் அவன் தீயவனா?

மாற்றுவோம்
இயற்கையின் போக்கை அல்ல..
மனதின் போக்கை..
காற்றின் திசையை அல்ல..
எம் சிறகுகளின் கோணத்தை…
புற வண்ணங்களை அல்ல அகஎண்ணங்களை…..
ஏனென்றால் இறைவன் மனிதனுடைய சூழ்நிலையை என்றும் மாற்றுவது கிடையாது.
அந்த சூழ்நிலையை புரிந்து கொள்ள வேண்டிய அவனது அகநிலையே மாற்றியமைக்கின்றான்.!
புரிதலின் செவிகளுக்கு மட்டும் தான் ஞானத்தின் கதவுகள் திறக்கும்
ஆன்மீக வழிகாட்டலலையும், புதிய சிந்தனை கண்ணோட்டங்களையும், பெற்றுக் கொள்வீர்கள்.
Transform your life with personalized coaching. Book a free consultation today!
உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்.
Aeuelistrasse, Sankt Margrethen, Schweiz

Copyright © 2020 wisdomtamil – Alle Rechte vorbehalten.